அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி பொது விடுமுறை! மத்திய அரசு அறிவிப்பு! - Seithipunal
Seithipunal



டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதியை பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாளை, ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் ஜெயந்தியாக நாட்டு முழுவதும் கொணடபட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டு முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பொது விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது அம்பேத்கரின் 130வது பிறந்தநாள் ஆகும். 

இது குறித்து அனைத்து அமைச்சகங்களுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ள குறிப்பாணையில், "டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி புதன்கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து உச்சநீதிமன்றமும் அன்றைய தினம் விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதியை தேசிய விடுமுறையாக அறிவித்தபோதும் இதேபோன்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr ambedkar birthday holiday 2023


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->