திடீர் வானிலை மாற்றம்... திருப்பி விடப்பட்ட 15 விமானங்கள்! டெல்லி மக்களுக்கு குட் நியூஸ்! - Seithipunal
Seithipunal


டெல்லியில் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென கனமழை பெய்ததால், கடும் வெயிலில் தவித்த பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர். 

இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் சுமார் 15 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. மேலும் பல விமானங்கள் தாமதமாக வந்தது. 

இந்த விமானங்களில் 9 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், தலா 2 விமானங்கள் அமிர்த சரஸ் மற்றும் லக்னோவிற்கும் மும்பை மற்றும் சண்டிகருக்கு தலா ஒரு விமானம் என 15 விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். 

மேலும் டெல்லியில் இருந்து சென்னைக்கு செல்ல இருந்த விமானம் 5 மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக வந்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம், டெல்லியில் வானிலை திடீரென மாறியது. 

டெல்லியில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 36.8 டிகிரி அதிகமாக இருந்தது. இதனை அடுத்து பலத்த காற்றுடன் லேசான மழை பெய்ததால் அடுத்த 7 நாட்களுக்கு டெல்லியில் வெப்ப அலை சாத்தியம் கிடையாது என தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi weather change 15 flights diverted


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->