டெல்லி ரெயில் நிலையத்தில் போர்ட்டராக மாறிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்!
Delhi railway station porter ex Congress party leader
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எம்.பியுமான ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்டார். அப்போது மக்களை சந்தித்து அவர்களின் நிறை குறைகளை குறித்து கேட்டறிந்தார்.
மேலும் விவசாயிகளுடன் சேர்ந்து டிராக்டர் ஓட்டுவது, டூவீலரை சரி செய்வது போன்ற செயல்களிலும் ஈடுபட்டார். இந்நிலையில் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில் நிலையத்திற்கு இன்று சென்றார்.

அங்கு ராகுல் காந்தி சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்களது சிகப்பு நிற ஆடையை அணிந்து கொண்டு சுமை தூக்கினார்.
இது தொடர்பான புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட காங்கிரஸ், 'மக்களின் தலைவரான ராகுல் காந்தி அவருடைய நண்பர்களை சந்தித்தார்.

முன்னதாக ரயில் நிலைய போர்ட்டர் நண்பர்கள் அவரை சந்திக்க விரும்பியதாக தெரிவித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அது போல் இன்று ராகுல் காந்தி அவர்களை நேரில் சந்தித்தார். அவர்களது பணி குறித்தும் கேட்டறிந்தார். இதனை அடுத்து அவரது பாரத் ஜோடோ பயணம் தொடர்கிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Delhi railway station porter ex Congress party leader