பிரதமர் மோடி அனைத்து அரசியல் தலைமை பிரிவினரையும் சந்திக்க வேண்டும் - வெங்கையா நாயுடு பேச்சு..!   - Seithipunal
Seithipunal


"பிரதமர் மோடியின் செயல்களால் இந்தியாவின் குரல் உலகம் முழுவதும் ஒலிக்கிறது" என முன்னாள் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு பேசியுள்ளார். 

பிரதமர் மோடியின் உரைகள் குறித்த புத்தக வெளியீட்டு விழா, இன்று புது டெல்லியில் நடைபெற்றது. இவ்விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். மேலும் சுகாதாரம், வெளியுறவுக் கொள்கை மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய நாடு சாதனை படைத்ததற்காக பிரதமர் மோடியை பாராட்டினார். 

இந்த விழாவில் கலந்துக்கொண்ட வெங்கையா நாயுடு தெரிவித்ததாவது, இப்போது உலகம் முழுவதும்  இந்தியாவின் குரல் ஒலிக்கிறது. இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வாறு நடப்பது சாதாரண விஷயம் அல்ல. இவை அனைத்திற்கும் காரணம் காரணம் பிரதமர் மோடியின் செயல்களும், மக்களுக்கு அவர் அளித்துவரும் வழிகாட்டுதலும் தான். 

பிரதமர் மோடி பல்வேறு சாதனைகள் செய்துள்ள போதிலும், சில தவறான புரிதல்களாலும், சில அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாகவும் சிலர் இன்னும் அவரது வழிமுறைகளைப் ஏற்று கொள்ளவில்லை. மேலும், பிரதமர் மோடி பல அரசியல் தலைமைப் பிரிவினரை அடிக்கடி சந்திக்கும் போது காலப்போக்கில், இந்த தவறான புரிதல்களும் விலகும். அனைத்து கட்சிகளும் கட்சித் தலைவர்களும் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi pm modi book release function


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal