ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு: விபத்தில் சிக்கிய பேருந்து! பயணிகளின் கதி?
Delhi Bus Driver Seizure Accident
டெல்லி, ரோஹினிப் பகுதியில் கடந்த 4 தேதி பேருந்து ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சாலையை கடக்க முயன்ற ஒருவர் உயிரிழந்தார். 12க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் கார் மற்றும் மின்சார ரிக்க்ஷா போன்றவை சேதமாகின.
இந்த விபத்து தொடர்பாக டெல்லி போக்குவரத்து கழகத்தின் மின்சார பேருந்தின் ஓட்டுனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், விபத்து ஏற்பட்ட பேருந்துக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் பேருந்து ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் இந்த விபத்து நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறையினர், கட்டுப்பாட்டை இழந்த பேருந்தை நிறுத்துவதற்காக நடத்துனர் முயற்சி செய்யும் காட்சிகளும் சி.சி.டிவி கேமராவில் பதிவாகி இருந்தது என தெரிவித்துள்ளார்.
English Summary
Delhi Bus Driver Seizure Accident