ரூ.3.2 கோடி... டெல்லியில் செயற்கை மழை திட்டம் தோல்வி! - Seithipunal
Seithipunal


தீபாவளி பண்டிகை நாளில் டெல்லி முழுவதும் பட்டாசுகள் வெடித்ததால் காற்று மாசுபாடு பெருமளவில் அதிகரித்தது. இதன் காரணமாக, நகரத்தின் காற்றுத் தரம் ஆபத்தான அளவிற்கு குறைந்தது. இதை சமாளிக்க, டெல்லி அரசு செயற்கை மழையை உருவாக்கும் முயற்சியில் இறங்கியது.

அதற்காக, கிளவுட் சீடிங் எனப்படும் முறையின் மூலம் மழை பெய்ய வைக்கும் பணியை உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஐஐடி கான்பூருக்கு ஒப்படைத்தது. இதன் ஒரு பகுதியாக, டெல்லி வான்வெளியில் 6,000 அடி உயரத்தில் பறக்கும் ஒரு சிறப்பு விமானம் மூலம் மேகங்களில் ரசாயனங்கள் தெளிக்கப்பட்டன.

இந்த முயற்சிக்காக ரூ.3.2 கோடி செலவிடப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி மழை பெய்யாததால், திட்டம் தோல்வியில் முடிந்தது.

இதுகுறித்து விளக்கமளித்த ஐஐடி கான்பூர் இயக்குநர், “மழை உருவாக தேவையான ஈரப்பதம் மேகங்களில் குறைவாக இருந்தது. இதனால் கிளவுட் சீடிங் மூலம் மழையை உருவாக்க முடியவில்லை” என கூறினார்.

இத்திட்டம் தோல்வியடைந்தாலும், டெல்லி அரசு மாசு கட்டுப்பாட்டிற்கான மாற்று முயற்சிகளைத் தேடி வருகிறது. காற்று மாசை குறைக்க வாகன உமிழ்வைக் கட்டுப்படுத்துதல், பசுமை மண்டலங்களை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரமாக பரிசீலிக்கப்படுகின்றன.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delhi Air Pollution artificial rain IIT failed


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->