ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசுத் தலைவர்கள் கவுன்சிலின் 25 வது கூட்டம்; தஜிகிஸ்தான் செல்லும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்..! - Seithipunal
Seithipunal


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசுத் தலைவர்கள் கவுன்சிலின் 25வது கூட்டம் நாளை தஜிகிஸ்தானில் தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கவுள்ளார்.

அக்டோபர் 19, 20 தேதிகளில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) அரசுத் தலைவர்கள் கவுன்சிவின் 25-வது கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்பதைக்காக தஜிகிஸ்தானின் துஷான்பே நகருக்குச் செல்லவுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே, வர்த்தகம், பொருளாதாரம், முதலீடு, போக்குவரத்து இணைப்பு, புத்தாக்கம், கலாசார பரிமாற்றங்கள் ஆகியவற்றில் பலதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், ஒத்துழைப்பு முயற்சிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யவதுடன், அமைப்பின் நிதி மற்றும் அமைப்பு சார்ந்த செயல்பாடுகள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பல்வேறு செயல்முறைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன், புத்தொழில் நிறுவனங்கள் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, மக்களுக்கு இடையேயான பரிமாற்றங்கள் போன்றவற்றில் பிராந்திய ஒத்துழைப்பிற்குத் தொடர்ந்து பங்களித்து வருகிறது.

அதன்படி, இந்த அமைப்புக்குள் நடைமுறைக்கு உகந்த, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து, மற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுடன் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள இக்கூட்டம் இந்தியாவிற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக, 2025 நவம்பர் 18 இல் ரஷியாவின் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசுத் தலைவர்கள் கவுன்சில் கூட்டத்தில், இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Defence Minister Rajnath Singh to visit Tajikistan to participate in the meeting of the Council of Heads of Government of the Shanghai Cooperation Organisation


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->