கடன் வசூலில் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் - நிர்மலா சீதாராமன் - Seithipunal
Seithipunal


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாடிக்கையாளர்களிடம், கடன் வசூலில் பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் கடுமையான அணுகுமுறைகளை கையாளக் கூடாது மற்றும் கடன் வசூலில் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்:
 
இன்று நாடாளுமன்றத்தில்  சிவ சேனா கட்சி எம்.பி. தைர்யஷீல் சாம்பாஜிராவ் மானே, வங்கி கடன் வசூல் அணுகுமுறை குறித்து ஒரு கேள்வி எழுப்பினார். ஒரு உணர்வு பூர்வமான கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். 

அதில் அவர் தெரிவிக்கையில், ''சில வங்கியில் கடன் வசூல் செய்யும் போது காட்டும் கெடுபிடிகள் தொடர்பான புகார்கள் அனைத்தையும் நான் அறிவேன். 

அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தனியார் வங்கிக் கொள்ளும் கடன் வசூலிக்கும் போது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது. 

வாங்கி கடன் வசூலிக்கும் அதிகாரிகள் மனிதாபிமானத்துடனும், உணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே அரசு அறிவித்துள்ளது'' என தெரிவித்தார். 

இந்த விவகாரத்தில் அரசு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த நிதித் துறை இணை அமைச்சர் பக்வத் கிருஷ்ணராவ் காரட், "ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு வாரியம் உள்ளது. கடன்களுக்கான வட்டி மற்றும் கூட்டு வட்டி போன்றவற்றை அவைதான் முடிவு செய்கின்றன. அதில் அரசு தலையிடுவதில்லை.

ஏழை மக்கள் கடன் என்ற வலைக்குள் சிக்கிவிடாமல் இருப்பதற்காக, அரசு பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனாவை செயல்படுத்துகிறது. 

இத்திட்டம் தனியார் அடகு கடைக்காரர்களிடம் இருந்து மக்களை காக்கவே உள்ளது. கடைக்காரர்களுக்காக சாலையோரம் ஆத்ம நிர்பார் நிதி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா மூலம், பொதுமக்கள் தொழில் முதலீட்டுக் கடனைப் பெறலாம்" என்று தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

debt collection be humane Nirmala Sitharaman


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->