மும்பை : தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகள்.! இன்ஸ்டாகிராமில் அனல் பறக்கும் பதிவு.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரைச் சேர்ந்தவர் பெண் ஆர்த்தி ரியா சக்ரவர்த்தி. இவர் தனது தாயார் மவுசுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இது தொடர்பாக ரியா தெரிவித்திருப்பதாவது:- 

என்னுடைய அப்பா இறந்த பிறகு, நானும் என் அம்மாவும் பாட்டியின் வீட்டிற்கு சென்றுவிட்டோம். நான் அங்கு தான் வளர்ந்தேன். அப்போது எனக்கு இரண்டு வயது, என் அம்மாவுக்கு 25 வயது. 

அதன் காரணமாக என் அம்மாவிடம் எல்லோரும் 'நீ மறுமணம் செய்து கொள்ள வேண்டும்' என்று சொல்வார்கள். ஆனால் அதற்கு அம்மா "நான் மறு திருமணம் செய்து கொண்டால் எனக்கு கணவரின் அன்பு கிடைக்கும் ஆனால் என் மகளுக்கு ஒரு தந்தை கிடைக்க மாட்டார்" என்று கூறுவார்.

தற்போது என் அம்மாவுக்கு நான் ஒரு துணையைக் கண்டுபிடித்தேன். அதேபோல் நானும் ஒரு அப்பாவைக் கண்டறிந்தேன் என்பதை அப்போது நான் உணர்ந்தேன். அம்மா இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறாள், அது என்னை மிகவும் மகிழ்ச்சியாக்குகிறது" என்று கூறி உள்ளார். 

இந்த பதிவு கியூமன்ஸ் ஆப் பாம்பேவில் கிரப்பட்ட கதையின் அமைப்பு போல் இருந்தது. கணவரின் மறைவுக்குப் பிறகு தனது வாழ்க்கையில் வேறு ஒருவரிடம் தனது மனதை திறக்கும்போது அவரது தாயார் எதிர்கொள்ளும் மனத் தடைகளை இந்த பதிவு விவரிக்கிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Daughter arranged remarried to her mother in Mumbai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->