தேவை அதிகரிப்பால் இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி 60.2 மில்லியன் டன்னாக உயர்வு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோலிய பொருள்களின் தேவையால் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி 60.2 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.

ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் கச்சா எண்ணெய்யின் உள்நாட்டு உற்பத்தி 7.45 மெட்ரிக் டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 0.62% அதிகமாகும்.

இந்நிலையில் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் கச்சா எண்ணெயின் 17 சதவீதம் இறக்குமதி அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பெட்ரோலிய பொருள்களின் ஏற்றுமதியும் 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதையடுத்து விலையேற்றம் காரணமாக முதல் காலாண்டில் கச்சா எண்ணெய்யின் இறக்குமதி 47.5 பில்லியன் டாலராக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் தகவலின் படி, உள்நாட்டு சுத்திகரிப்பு நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலத்தில் 65.8 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை பதப்படுத்தியுள்ளன. இது கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது 14.8% அதிகமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Crude oil imports jumps to 60 million tons


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->