அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு எழுதிய அவசர கடிதம்.!  - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் இந்தியாவில் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, இந்தியாவில்  கொரோனா தடுப்பூசி போடுவதற்காக நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக முன்னெடுத்து உள்ளது.

கடந்த 3-ந் தேதி இந்தியாவில் புனே இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்குகிற 'கோவிஷீல்டு' தடுப்பூசிக்கும், ஐதராபாத் பாரத் பயோடெக்கின் 'கோவேக்சின்' தடுப்பூசிக்கும் அவசர கால பயன்பாட்டு ஒப்புதலை இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை இயக்குனரகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

தொடர்ந்து 10 நாட்களுக்குள் கொரோனா  தடுப்பூசி வினியோகத்தை தொடங்கி விட தயாராக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது

இந்தநிலையில், தடுப்பூசி வழங்குவதை ஏற்றுக்கொள்வதற்கான தயார் நிலையை உறுதிப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் குழந்தைகள் நல ஆலோசகர் மருத்துவர் பிரதீப் ஹால்டர் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட 19 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் அடையாளம் காணப்பட்டுள்ள மையத்தில் தடுப்பூசி வினியோகிக்கப்படும் என்றும், அவற்றை பெறுவதற்கு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. மாதம் உள்ள 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அந்தந்த அரசு மருத்துவ அங்காடி கிடங்குகளுக்கு தடுப்பூசி வினியோகிக்கப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona vaccine process in india


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->