#BREAKING || மீண்டும் 20 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா...  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று புதிதாக 18,840 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

நாடு முழுவதும் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று புதிதாக 18,840 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் சிகிச்சை பெருவோரின் எண்ணிக்கை 1,25,028 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெரும் நபர்களின் விகிதம் 0.29 சதவீதமாக உள்ளது.

மேலும், புதிதாக 43 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,25,386 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின்  விகிதம் 1.20  சதவீதமாக உள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து 16,104 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,29,53,980 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் விகிதம் 98.51 சதவீதமாக உள்ளது.

தற்போதுவரை நாடு முழுவதும் 1,98,65,36,288 டோஸ் தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மேலும் நேற்று மட்டும் 12,26,795 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CORONA REPORT 9 JULY 2022


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->