ஒட்டுமொத்த காங்கிரஸும் அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் - காங்கிரஸ் தலைவர் அதிரடி! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயிலுக்கு ஒட்டுமொத்த காங்கிரஸும் செல்லும் என்று, மாநிலங்களவை எதிர்க்கட்சித் துணை தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான பிரமோத் திவாரி அறிவித்துள்ளார்.

வரும் 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த  விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர், முன்னாள் தலைவர், மாநில தலைவர் உள்பட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பட்டுள்ளது.

அழைப்பை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள காங்கிரஸ் மேலிடம், இவ்விழாவையும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. 

இந்த நிலையில், பாராளுமன்றத்தின் மாநிலங்களவை எதிர்க்கட்சித் துணை தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான பிரமோத் திவாரி விடுத்துள்ள அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், “அயோத்தி எங்களுக்கு நம்பிக்கைக்குரிய விஷயம். அயோத்தி ராமர் கோவிலுக்கு அழைப்பிதழ் கொடுக்க பாஜக-வினர் யார்? அழைப்பிதழ் கொடுக்காமலேயே காங்கிரஸ் மொத்தமும் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும்” என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress MP say About Ayodhi Ramar temple ingratiation


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->