கர்நாடக சட்டசபைத் தேர்தல் : முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதி கொண்ட சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் இப்போதிலிருந்தே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரும், காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, உள்ளிட்ட சிலரும் மாநிலம் முழுவதும் சென்று மக்கள் ஆதரவை திரட்டி வருகின்றனர்.

அதுபோல் ஆம் ஆத்மி கட்சி, ஜனதாதளம் கட்சி சார்பிலும் தேர்தல் பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், கர்நாடகா மாநிலம் முழுவதும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 

இதில், மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வருணா தொகுதியிலும், மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 

கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில், 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congrass candidates list published in karanataga assembly election


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->