உச்சநீதிமன்ற தீர்ப்புகளை 4 மொழிகளில் மொழிபெயர்க்க குழு அமைப்பு.! - Seithipunal
Seithipunal


நேற்று டெல்லியில் உயர்நீதிமன்றம் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்துகொண்டார். அதன் பின்னர் அவர் அந்த நிகழ்ச்சியில் பேசியதாவது, 

"ஆங்கிலத்தில் உள்ள சட்டங்களை தொண்ணூற்று ஒன்பது சதவீத மக்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. சட்டங்களை மக்கள் தாங்கள் பேசும் மொழியில் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். 

இதற்காக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை இந்தி, தமிழ், குஜராத்தி மற்றும் ஒடியா உள்ளிட்ட நான்கு பிராந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்வதற்கு நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

இதில், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ், என்.ஐ.டி. தர்மிஸ்தா, ஐ.ஐ.டி. டெல்லியை சேர்ந்த மித்தேஷ் கப்தா, ஏக். ஸ்டெப் பவுண்டேசன் விவேக் ராகவன், அகாமி நிறுவனத்தை சேர்ந்த சுப்ரியா சங்கரன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

committiee to supreme court judgements translate four languages


கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?Advertisement

கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?
Seithipunal