முதல் முறையாக டாப் 10-ல் இடம்பெறாத டெல்லி - மகிழ்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்! - Seithipunal
Seithipunal


உலகின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியலில் இருந்து டெல்லி வெளியேறியுள்ளது.

உலகின் மிக மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியலில் இருந்து டெல்லி வெளியேறியுள்ளதாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஜனவரி 29 முதல் பிப்ரவரி 8 வரையிலான ஒரு வார காலத்தில் முதல் 10 இடத்தில் உள்ள காற்று மாசுப்பாட்டு நகரங்கள் பட்டியலை, அண்மையில் மத்திய காற்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்வெளியிட்டது. அதன்படி,

1. லாகூர் (பாகிஸ்தான்) 
2. மும்பை (இந்தியா) 
3. காபூல் (ஆப்கானிஸ்தான்) 
4. காஹ்சியுங் (தைவான்) 
5. பிஷ்கெக் (கிர்கிஸ்தான்) 
6. அக்ரா (கானா) 
7. கிராகோவ் (போலந்து)
8. தோஹா (கத்தார்)
9. அஸ்தானா (கஜகஸ்தான்) 
10. சாண்டியாகோ (சிலி) ஆகிய 10 நகரங்கள் காற்று மாசடைந்துள்ளது.

இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் வெளியிட்ட அறிக்கையில், "நீண்ட நாட்களுக்குப் பின், உலகின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியலில் டெல்லி இல்லை என்பது மகிழ்ச்சி.

மக்களின் முயற்சிக்கு பயன் கிடைத்துள்ளது. டெல்லிக்கு மக்களுக்கு வாழ்த்துக்கள். நாம் இன்னும் முயற்சி செய்து. உலகின் மிக சுத்தமான நகரங்களில் இடம்பெற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm arvind kejriwal happy for delhi exit


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->