மாணவர்கள் மீது வழக்குகள் தொடரப்போவதில்லை என அரசு உறுதி; செப்.5 போராட்டத்தை வாபஸ் பெற்ற சிஜேபி..! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலை 20 அன்று சிஜேபி அமைப்பினர் டெல்லி ஜந்தர் மாந்தரின் நடத்திய போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் தொடர்ந்து முன்னெடுக்கப்போவதில்லை என்று மத்திய அரசு,  உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்தது. இதைத் தொடர்ந்து, டெல்லியில் செப்டம்பர் 05-ஆம் தேதி நடைபெற இருந்த போராட்டத்தை ரத்து செய்வதாக சிஜேபி அறிவித்துள்ளது.

நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஜூலை 20 டெல்லியிலும், நாட்டின் பல பகுதிகளிலும் நடத்தப்பட்ட போராட்டம் காரணமாக மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் ராஜினமா செய்த நிலையில், மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் மாணவர் பிரதிநிதிகளிடம் உறுதி அளித்தனர். இதையேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

இந்நிலையில், அரசு சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின்படி, போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை என்று கூறி, வழக்குகளை திரும்பப்பெற வலியுறுத்தி செப்.05-ஆம் தேதி மீண்டும் டெல்லியில் பேரணி நடத்தப்படும் என சிஜேபி அறிவித்தது.

இருப்பினும் இந்தப் பேரணிக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதன் பின்னணியில், மாணவர் போராட்டங்கள் தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்யக் கோரியும், ஜூலை 20 முதல் ஜூலை 25 வரையிலான போராட்டங்கள் தொடர்பாக இனி எந்த முதல் தகவல் அறிக்கைகளும் பதிவு செய்யப்படாது என்று உறுதியளித்தும் மத்திய அரசு (டெல்லி காவல் துறை) மற்றும் பிஹார், அசாம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன், ஜூலை 25 அன்று சிஜேபி தலைவர்களிடம் மத்திய அரசு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய அரசின் இந்த மனுக்களை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், அரசியல் சாசனம் சட்டப்பிரிவு 142 மூலம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து, செப்.5-ஆம் தேதி நடத்த இருந்த போராட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றுக்கொள்வதாக சிஜேபியின் செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CJP cancels September 5 protest despite government assurances that cases will not be filed against students


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->