சித்திரை விஷு பூஜை.. சபரிமலை கோவிலில் இன்று நடை திறப்பு.! - Seithipunal
Seithipunal


சித்திரை விஷு பூஜை கேரளாவில் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இவ்வருட சித்திரை விஷு பண்டிகை வரும் ஏப்ரல் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதனையடுத்து சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மேலும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதி உண்டு. வரும் 15ஆம் தேதி விஷுக்கனி தரிசனம் நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். காலை 4 மணி முதல் 7 மணி வரை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு நாணயங்களை கை நீட்டமாக வழங்குவார்கள். மேலும் சபரிமலையில் பூஜை மற்றும் பிரசாத கட்டணம் உயர்வு வரும்11ம் தேதி நாளை முதல்  அமலுக்கு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chithirai Vishu Puja Opening of the walk at Sabarimala temple today


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->