அதிக கட்டணம் வசூல் செய்த திரையரங்குகளுக்கு எதிரான வழக்கு.! தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவராஜன் என்பவர் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது, "தமிழகத்தில் பிரபல நடிகர்களின் படங்களான சிங்கம் 3 , பைரவா உள்ளிட்ட படங்கள் பண்டிகை காலங்களில் வெளியானது. 

அப்போது திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது தொடர்பாக அரசு மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த நிலையில், இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட திரையரங்குகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், "அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல், கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்று தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai high court order to action taken on theaters by extra charging fees tamilnadu government


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->