வேகமாக வந்த கார்.! நிறுத்த சொன்ன ட்ராஃபிக் போலிஸ்க்கு நேர்ந்த துயரம்! காவல் துறை தீவிர விசாரனை!
chennai a speeding vehicle hit the traffic police and runaway from the spot
சென்னையில் இன்று போக்குவரத்து காவலர் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜெயக்குமார் என்பவர் காவல்துறையில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வேகமாக வந்த கார் ஒன்றை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் அந்தக் காரின் ஓட்டுநர் நிற்காமல் இவர் மீது மோதி விட்டு வேகமாக சென்று இருக்கிறார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயக்குமாரை ரத்த வெள்ளத்தில் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. காவலர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
English Summary
chennai a speeding vehicle hit the traffic police and runaway from the spot