நாட்டில் அதிகரித்துள்ள மருத்துவ செலவை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை..!
Central government steps to control rising medical costs in the country
கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு நாட்டில் மருத்துவ செலவு 13 சதவீதம் அதிகரித்துள்ளது. இது சர்வதேச அளவில் 10 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அதிகரித்து வரும் மருத்துவச் செலவை குறைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மத்திய அரசும், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஆய்வு நடத்தியுள்ளது. அதன்படி, சிகிச்சை அளிப்பதற்கான செலவை மருத்துவமனைகள் அதிகரிப்பதுடன், அதிக காப்பீடு எடுத்த பாலிசிதாரர்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதும் தெரிய வந்துள்ளது.
-a6y9x.png)
இதனால், காப்பீட்டு நிறுவனங்கள் அதிக காப்பீட்டு தொகையை வசூலிக்க தூண்டியுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து செலவை குறைக்க வேண்டும் என்பதற்காக, மருத்துவ காப்பீட்டு சிகிச்சைக்கான பணம் கோரும் இணையதளத்தை மத்திய நிதித்துறை மற்றும் ஐஆர்டிஏஐ அமைப்பின் கீழ் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
Central government steps to control rising medical costs in the country