சர்வதேச மாணவர்களுக்கான பிரத்யேக இணையதளம் - மத்திய அரசு தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


சர்வதேச மாணவர்களுக்கான பிரத்யேக இணையதளம் -   மத்திய அரசு தொடக்கம்.!

நாட்டில் சர்வதேச மாணவர்களின் கல்வி தேடல்களை எளிதாக்கும் வகையில் இந்தியாவில் படி என்ற இணையதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையதளத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

அதன் பின்னர் இந்தத் திட்டம் குறித்து ஜெய்சங்கர் பேசுகையில் இந்தத் திட்டம் பல்வேறு பின்னணியில் உள்ள மாணவர்களை வரவேற்பதன் மூலம் இந்தியாவை உலகளாவிய கல்வியின் மையமாக மாற்றுவதை நோக்கமாக கொண்டதுடன்,  சர்வதேச மாணவர்களுக்கான பதிவு முதல் விசா அனுமதி வரை பயனர் நட்பு விண்ணப்ப செயல்முறைகளை செயல்படுத்தும்.

இந்த இணையம் சர்வதேச மாணவர்கள் தங்கள் விரும்பிய படிப்புகளை தேர்ந்தெடுப்பதற்கும் உதவும் என்றுத் பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து பேசிய மத்திய கல்வி அமைச்சர், இந்த இணையதளம் கல்விக் கொள்கையால் வழிநடத்தப்படும்.

இது இந்தியாவை விருப்பமான கல்வி இடமாக மாற்றுவதுடன் வளமான உயர்கல்விக்கான விருப்பமான இடமாக இந்தியாவை மாற்றுவதுடன் வளமான எதிர்காலத்தை வடிவமைக்கும். உயர்கல்விக்கான விருப்பமான இடமாக இந்தியாவை மாற்றுவதில் இந்த இணையதளம் முக்கிய படியாக இருக்கும் என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central government start website of study in india


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->