அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்க மத்திய அரசு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் விசாரணை அமைப்புகளில் ஒன்றான அமலாக்கத்துறையின் இயக்குனராக இருப்பவர் சஞ்சய் குமார் மிஸ்ரா. இவருடைய பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், அமலாக்கத்துறையின் இயக்குனராக சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதற்கு முன்னதாக, இவருடைய பதவிக்காலம் கடந்த ஆண்டுடன் நிறைவடைந்த நிலையில், மேலும் இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக அரசு தெரிவித்தது மட்டுமல்லாமல், இதற்கு மத்திய அரசின் கேபினட்டும் ஒப்புதல் அளித்துள்ளது. 

அதேபோல், கடந்த ஆண்டு மத்திய புலனாய்வுப் பிரிவு மற்றும் மலாக்கத்துறை இயக்குநரின் பதவிக் காலத்தை இரண்டு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிப்பதற்கான மசோதாக்களை அரசாங்கம் கொண்டுவந்து, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது ஆகும். 

இதையடுத்து, டெல்லியில் வருமான வரித்துறை தலைமை கமிஷனராக பணியாற்றி வந்த சஞ்சய் குமார் மிஸ்ரா, கடந்த 1984-ம் ஆண்டு பிரிவு இந்திய வருவாய் பணி அதிகாரியாக பதவி வகித்தார்.

இதில், அமலாக்கத்துறை இயக்குனர் பதவி என்பது மத்திய அரசின் கூடுதல் செயலாளர் பதவியாகும். இதன் காரணமாக அவர் இன்னும் ஓராண்டுக்கு அமலாக்கத்துறை இயக்குனர் பொறுப்பை வகிப்பார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central government order for Enforcement Directorate Sanjay Kumar Mishra Tenure extend


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->