வருமான வரி தாக்கல் செய்ய போறிங்களா? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


மத்திய நேரடி வரிகள் வாரியம், 2023 - 2024 நிதி ஆண்டுக்கான புதிய வருமான வரி ரிட்டர்ன் படிவங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய படிவங்கள் 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை பிப்ரவரி மாதம் தான் படிவங்கள் வெளியிடப்பட்டது மத்திய அரசு. ஆனால் இந்த முறை வழக்கத்தை விடவும் முன்னதாக படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஐடிஆர் 1 (SAHAJ) மற்றும் ஐடிஆர் 4 (SUGAM) ஆகிய இரு புதிய வருமான வரி ரிட்டன் படிவங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் தெப்போது வெளியிட்டுள்ளது. ஐடிஆர் 1 படிவமானது, ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை வருமானம் ஈட்டும் ஊதியம், வட்டி வருவாய், வேளாண் துறை மூலமாக வருவாய் பெறும்  தனி நபர்களுக்கானது.


தொழில் மூலம் வருவாய் ஈட்டும் தனிநபர்கள், நிறுவனங்கள் ஐடிஆர் 4 படிவம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய படிவங்களில், வரிதாரர்கள் தங்கள் அனைத்து வங்கிக் கணக்குகள், பண ரசீது விவரங்கள் குறிப்பிட வேண்டும். முந்தைய ஆண்டில் இந்தியாவில் செயல்பாட்டில் இருந்த வங்கிக் கணக்குகள், அவை எந்த வகை கணக்குகள் உள்ளிட்ட விவரங்களை வரிதாரர்கள் தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. வழக்கத்தை விட முக்கூட்டியே படிவங்கள் வெளியிடப்பட்டிருப்பது வரிதாரர்கள் சிரமமின்றி வருமான வரி தாக்கல் செய்ய ஏதுவாக அமையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central direct taxes board released new Income tax return forms


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->