இனி வந்தே பாரத் ரயில்களில் படுத்துட்டு போகலாம்..!! ரயில்வே அமைச்சகம் ஐ.சி.எஃப்.,க்கு உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் பயண நேரத்தை குறைக்கும் நோக்கில் வந்தே பாரத் அதிவேக ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வந்தே பாரத் ரயில்களுக்கான பெட்டிகள் இருக்கை வசதியுடன் சென்னையில் உள்ள ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 117 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ஐ.சி.எஃப் நிறுவனம் ஆர்டர் பெற்றுள்ளது.

இந்த நிலையில் 117 வந்தே பாரத் ரயில்களில் 75 ரயில்களில் மட்டும் இருக்கை வசதியுடன் தயாரிக்கவும், மீதமுள்ள 42 ரயில்கள் படுக்கை வசதியுடன் இரவு நேரங்களில் பயணம் செய்யும் வகையில் தயாரிக்கவும் இந்திய ரயில்வே அமைச்சகம் ஐ.சி.எஃப் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. தற்பொழுது இந்தியா முழுவதும் 6 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் நாளை(டிச.30) ரயில் நிலையத்திலிருந்து 7வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவில் மொத்தம் 400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பொழுது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதனால் அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 200 முதல் 300 வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cental govt ordered to ICF for Vande Bharat train with sleeper facility


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->