அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்! டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


வருகின்ற 16ஆம் தேதி (நாளை மறுநாள்) காலை 11 மணிக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

டெல்லி அரசியலை புரட்டிப்போட்ட புதிய மதுபான கொள்கை விவகாரம் காரணமாக, டெல்லியில் துணை முதலமைச்சர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது முதலமைச்சருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

டெல்லியில் கடந்த ஆண்டு புதிய மதுபான கொள்கை கொண்டுவரப்பட்டது. இந்த புதிய மதுபான கொள்கையின் மூலம் முறைகேடுகளில் ஈடுபடுவதற்கும், ஊழலை செய்வதற்கும் வழி வகுத்துள்ளதாக பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து துணைநிலை ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆளுநரின் அனுமதியோடு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து, டெல்லி துணை முதலமைச்சர் உள்ளிட்ட பலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த விவகாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சிபிஐ சமன் அனுப்பியுள்ளது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக ஆம் ஆத்மி கட்சியை தேசிய கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தபோது, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 'நாம் இப்போது தேசிய கட்சியாக மாறிவிட்டோம், இனி பல கைது நடவடிக்கைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI summons to Delhi CM Arvind Kejriwal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->