அமித்ஷா-விடம் சிபிஐ விசாரணை செய்யவேண்டும்! சமயம் பார்த்து பதிலடி கொடுக்கும் காங்கிரஸ்! - Seithipunal
Seithipunal


மேகாலயா அரசு நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்தது என்ற அமித் ஷாவின் பேச்சு குறித்து, சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று, காங்கிரஸ் எம்பி சிபிஐ இயக்குநருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ் எழுதியுள்ள அந்த கடிதத்தில், "பிப்ரவரி 17, 2023 அன்று அமித் ஷா தனது பொது உரையில், அப்போதைய மேகாலயா அரசு நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசு என்று கூறியதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா, மேற்கூறிய அவரின் கூற்றுக்கு சென்ற தகவல் மற்றும் உண்மைகள் அவருக்கு நிச்சயமாக கிடைத்திருக்கும்.

அப்போதைய மேகாலயா அரசாங்கத்தின் ஊழல் நடைமுறைகள் மற்றும் நிகழ்வுகள், இது தொடர்பான தகவல் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார்

எனவே, தேசிய நலன் கருதி, அமித் ஷாவை அழைத்து, ஊழல் குறித்து அவர் பேசியதற்கு உண்டான தகவல்களையும் உண்மைகளையும் சமர்ப்பித்து, விசாரணை நடத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்" என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பெண்கள் பாலியல் வன்கொடுமை குறித்த பேசியதற்காக அவரிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI Inquarry for Amit sha Speech Congress MP Jairam Ramesh


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->