அவசரமாக ஒன்று கூடும் காவிரி மேலாண்மை ஆணையம் - தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா? - Seithipunal
Seithipunal


அவசரமாக ஒன்று கூடும் காவிரி மேலாண்மை ஆணையம் - தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா?

கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுப்பதால், தமிழ்நாடு மக்கள் தண்ணீர் கேட்டு உரிமையோடு போராடி வருகின்றனர். இதனால், நேற்று முன்தினம் காணொலி மூலமாக நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் 16-ந்தேதி காலை 8 மணி முதல் 31-ந்தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என்று ஒழுங்காற்றுக்குழு அதிகாரிகள் கர்நாடகத் அரசைக்  கேட்டுக்கொண்டனர்.

காவிரி நதிநீர் பங்கீட்டில் ஒழுங்காற்றுக்குழு முதலில் அந்தந்த மாநிலங்களுக்கு தங்களது முடிவை வேண்டுகோளாக அல்லது பரிந்துரையாகத்தான் வைக்கும். இதனை மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருந்தால் அந்த விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் தலையிடாது. ஆனால் ஏற்றுக்கொள்ளாத நிலை ஏற்படும் பட்சத்தில் மேலாண்மை ஆணையம் தலையிடும்.

அந்த வகையில் நேற்று முன்தினமும் ஒழுங்காற்றுக்குழு விடுத்த பரிந்துரையை கர்நாடகம் செயல்படுத்த தயக்கம் காட்டி இருப்பதனால் காவிரி மேலாண்மை ஆணையத்தை அவசரமாக கூட்ட வேண்டும் என்று, ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் நேற்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பின் படி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லி மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 26-வது கூட்டமான இதில், தமிழ்நாட்டுக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வலியுறுத்தப்போவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதனால், கர்நாடக அரசு ஆணையம் ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரைப்படி 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்புக்கு உத்தரவிடுமா? அல்லது தமிழ்நாட்டின் வலியுறுத்தலை ஏற்று கூடுதல் தண்ணீரை திறக்க உத்தரவிடுமா? என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cauvery Management Authority meeting in delhi today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->