காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல் - முதலமைச்சரின் பாதுகாவலர்கள் மீது வழக்குபதிவு.! - Seithipunal
Seithipunal


நவம்பர் 18 ஆம் தேதி கேரள மாநில அரசு 'நவ கேரளா சதஸ் யாத்ரா' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் மீது, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் பாதுகாவலர்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.
இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏ.டி.தாமஸ் மற்றும் அஜய் குரியகோஸ் உள்ளிட்டோர் முதலமைச்சரின் பாதுகாவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரணை செய்து நீதிமன்றம் அளித்த உத்தரவின் படி, முதலமைச்சர் பினராயி விஜயனின் பாதுகாவலர்கள் இரண்டு பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294 பி, 323 மற்றும் 325 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file on cm binarai vijayan guards for attack congrass partys


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->