பறக்க தயாரான விமானத்தில் இருந்து கீழே குதித்த வாலிபர்: அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்! - Seithipunal
Seithipunal


கனடா டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் கனடா விமானம் துபாய்க்கு புறப்பட தயாரானது. பயணிகள் அனைவரும் தங்களது இருக்கைகளில் அமர்ந்திருந்த போது ஆண் பயணி ஒருவர் தனது இருக்கையில் அமராமல் நின்று கொண்டிருந்தார். 

இந்நிலையில் திடீரென ஆண் பயணி விமானத்தின் கேபின் கதவை திறந்து சுமார் 20 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்தார். 

இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். 

எதற்காக வாலிபர் விமானத்தில் இருந்து கீழே குதித்தார் என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்த வாலிபரின் பெயர், விவரங்கள் குறித்து எதுவும் வெளியிடாத போலீசார் அவர் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்தும் தெரிவிக்கவில்லை. 

இந்த அதிர்ச்சி சம்பவத்தால் துபாய்க்கு செல்ல இருந்த ஏர் கனடா விமானம் சுமார் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Canada teenager jumped down plane passengers shocked


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->