10 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநயகரிடம் மனு - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. மாநிலத்தின் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார். 

இதனால், பிரதான எதிர்க்கட்சியான சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். எனப்படும் பாரதிய ரஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்த 39 எம்.எல்.ஏ.க்களில் பத்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மாற்றுகட்சிக்கு தாவினர்.

இந்த நிலையில் பி.ஆர்.எஸ். கட்சி செயல் தலைவர் கே.டி.ராமாராவ் தலைமையிலான நிர்வாகிகள் இன்று சட்டசபை சபாநாயகர் கதாம் பிரசாத் குமாரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் தங்கள் கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் மாற்று கட்சியில் இணைந்துள்ளனர்.

இவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இது தொடர்பாக பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். இல்லையெனில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

brs party petition to assembly speaker for disqualification 10 mlas


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->