யூ-டியூப் பார்த்து தற்கொலை செய்துகொண்ட சிறுவன் - போலீசார் விசாரணை.!
boy sucide after watch you tube vedio in uttar pradesh
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சுமேர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் நிகில் சாகு, பதினொரு வயதுடைய இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நிகில் கடந்த வியாழக்கிழமை, வீட்டில் தனியாக இருந்த போது தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் படி போலீசார் விரைந்துச் சென்று, சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில், சிறுவன் நிகில் சாகு வீட்டில் தனியாக இருந்தபோது, யூ-டியூப் வலைதளத்தில் உயிரை மாய்த்துக் கொள்வது தொடர்பான வீடியோவை பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், போலீசாருக்கு சிறுவன் அந்த வீடியோவை பார்த்த பிறகு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், போலீசார் இந்தத் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
boy sucide after watch you tube vedio in uttar pradesh