பாஜகவை தொற்றிக்கொண்ட தேர்தல் காய்ச்சல்... மோடி தலைமையில் இன்று தேசிய செயற்குழு கூட்டம்...!!! - Seithipunal
Seithipunal


கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பாஜக குஜராத்தில் வரலாற்றுச் சாதனையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. அதேசமயம் இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுத்தது. இந்த நிலையில் நடப்பாண்டில் இந்தியா முழுவதும் 10 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டெல்லியில் இன்று 2 நாள் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கவுள்ளது.

இந்த கூட்டத்தில் நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா, கர்நாடகா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்தான ஆலோசனை நடைபெற உள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் அடைந்த தோல்வி குறித்து பாஜக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோன்று கர்நாடகாவில் பாஜகவுக்கு எதிரான அரசியல் சூழல் நிலவுவதால் இது குறித்தான ஆலோசனையும் முக்கிய இடம் பெற்றுள்ளது. 

எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலை தீர்மானிக்கும் வகையில் 10 மாநில சட்டமன்ற பொது தேர்தல் முடிவு அமையும் என்பதால் பாஜக தீவிர ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. இன்று நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்க உள்ளார். இதனால் டெல்லி சாலைகளில் திறந்த வாகனத்தில் பேரணியாக செல்ல உள்ளார். இதன் காரணமாக டெல்லி நகர் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பாஜக முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் உட்பட 350க்கும் மேற்பட்ட பாஜக பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். தமிழக பாஜகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP working committee meeting in Delhi under PMModi


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->