திரிபுராவில் மீண்டும் ஆட்சியை பிடித்த பாஜக.! - Seithipunal
Seithipunal


கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்த திரிபுரா மாநிலத்தில் கடந்த 2018 ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 44 இடங்களை கைபற்றி பாஜக கூட்டணி முதல் முறையாக வெற்றி பெற்றது. அதன் பின்னர் திரிபுரா மாநிலம் பாஜக வசம் வந்தது.

இந்த நிலையில், திரிபுரா மாநிலத்தில் கடந்த மாதம் 16 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கூட்டணி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இதில் ஆரம்பம் முதல் முன்னிலை பெற்று வந்த பாஜக மூன்று சுற்று வாக்குகளின் எண்ணிக்கையின் முடிவில் 32 இடங்களில் பெருபான்மையுடன் முன்னிலை பெற்று மீண்டும் திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp won tripura assembly election


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->