பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்! தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் டிசம்பர் 8ம் தேதி வெளியாகும். குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் பொருத்தவரை மும்முனைப் போட்டியில் நிலவி வருகிறது. இந்த நிலையில் பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி நட்டா, குஜராத் முதல்வர் பூபேந்தர பட்டேல், குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர் பாட்டீல் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். இந்த தேர்தல் அறிக்கையில் 40 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

அதில் குறிப்பாக "குஜராத் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும். தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை தடுக்கும் வகையில் தீவிரவாத தடுப்பு பிரிவு கொண்டு வரப்படும். குஜராத் மாநிலத்தின் பொருளாதாரம் ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்தப்படும். பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் சமூக விரோதிகளிடம் இருந்து அதற்கான இழப்பீட்டை பெற்று தருவதற்கான சட்டம் கொண்டுவரப்படும். 

பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களை சேர்ந்த கல்லூரி மாணவிகளுக்கு இலவச மின் ஸ்கூட்டர் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இலவசமாக தலா இரண்டு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். குஜராத்தில் வயதான பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பேசிய தேசிய தலைவர் ஜெ.பி நட்டா பாஜக தனது தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் என உறுதியளித்தார். 

அதே போன்று காங்கிரஸ் கட்சியும் தனது தேர்தல் வாக்குறுதியில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், இலவச மின்சாரம், வேலையில்லாதவர்களுக்கு ஊக்கத்தொகை போன்றவற்றையும், ஆம் ஆத்மி கட்சி அனைத்து பெண்களுக்கும் உதவி தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP promised in election manifesto General civil law will be introduced


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->