ராகுலின் கருத்து பொய் மற்றும் பொறுப்பற்றது; பதிலடி கொடுத்துள்ள பாஜக..!
BJP has responded by calling Rahuls comments false and irresponsible
லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல்காந்தி, 'மத்திய அரசு, வெளிநாட்டு தலைவர்களையும், எதிர்க்கட்சி தலைவரும் சந்தித்து பேசும் மரபை கைவிட்டு விட்டது. போதிய பாதுகாப்பின்மையால் இதுபோன்று செய்கிறார்கள்' என குற்றம் சாட்டியிருந்தார்.
எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ராகுல் கூறும் குற்றச் சாட்டுகள் உண்மை கிடையாது என்று பாஜக மறுத்துள்ளது.
ராகுல் கூறிய, 'மத்திய அரசு பாதுகாப்பற்றதாக உணருவதால், வெளிநாட்டு தலைவர்கள் எதிர்க்கட்சி தலைவரை சந்திக்க அனுமதிக்கப் படுவதில்லை'' என்பது முற்றிலும் பொய் என்றும், ராகுலால் அரசு ஏன் பாதுகாப்பற்றதாக இருக்க வேண்டும்..? எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல் இன்று தெரிவித்த கருத்துக்கள் பொருத்தமற்றவை என்று பாஜ எம்பியும், பாஜ செய்தி தொடர்பாளருமான சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்று, இந்தியா உலகப் பொருளாதாரத்தில் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது என்றும், ராகுல் வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம், அந்த நாடுகளின் தலைவர்களை அவரைச் சந்திக்க வேண்டாம் என்று அரசு கேட்டுக்கொள்வதாக கூறுவது பொறுப்பற்றது என்றும், சம்பித் பத்ரா கூறியுள்ளார்.
English Summary
BJP has responded by calling Rahuls comments false and irresponsible