வாரணாசி ஐஐடி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு - பாஜக நிர்வாகிகள் கைது.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி தனது தோழியுடன் அங்குள்ள ஷாப்பிங் மாலுக்குச் சென்று விட்டு திரும்பி வந்துள்ளார். 

அப்போது மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை அந்த மாணவியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று வீடியோ எடுத்து மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது தோழிகளுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அந்தப் புகாரின் படி, போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது பிரிஜ் என்கிளேவ் காலனி சுந்தர்பூரைச் சேர்ந்த குணால் பாண்டே, ஜிவாதிபூர் பஜார்திஹாவைச் சேர்ந்த அபிஷேக் சவுகான் என்ற ஆனந்த் மற்றும் பஜார்திஹாவைச் சேர்ந்த சக்ஷாம் படேல் என்ற லங்கா எஸ்ஹோ சிவகாந்த் மிஸ்ரா என்பது தெரிய வந்தது.

ஆனால், இவர்கள் அனைவரும் பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ளதால் அவர்களை கைது செய்யாமல் போலீஸார் தாமதித்து வந்ததால், பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தனியார் நிகழ்ச்சிக்கு வந்த மத்திய அமைச்சர் ஸ்மிதி ராணியையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரையும் போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bjp executers arrest for varanasi iit student harassment case


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->