பா.ஜனதா பெற்ற நன்கொடைகள் எல்லாம் இப்போதுதான் அம்பலமாகும்... - ப. சிதம்பரம் பேச்சு!
BJP donations received exposed p Chidambaram speech
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் தேர்தல் பத்திரம் திடமானது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் நன்கொடை பெற்ற விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதனால் ஒவ்வொரு கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்கள். முதலாளிகளிடமிருந்து எவ்வளவு பணம் நன்கொடையாக பெற்றது என்ற விவரத்தை மார்ச் 31ம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட உள்ளது.
இந்நிலையில் ப. சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார். மேலும் இந்த தீர்ப்பு குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,

ஜனநாயகம், சமத்துவம், நியாயம் போன்ற கொள்கைகளை தேர்தல் பத்திரம் திட்டம் மீறியது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வெளிப்படை தன்மை, தகவல் அறியும் உரிமை, தேர்தலில் சமநிலை போன்றவற்றை உணர்த்துகிறது.
தற்போது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெரும் முதலாளிகள் மூலம் பா.ஜ.க பெற்ற 90% நன்கொடைகள் அம்பலமாக உள்ளது.
பணம் கொடுத்தது யார், அதற்கு பிரதிபலனாக கட்சி கொடுத்தது என்ன என்பது குறித்து உலகம் தெரிந்து கொள்ளப் போகிறது. அதன் பிறகு மக்கள் தங்களது சொந்த முடிவை எழுதுவார்கள் என தெரிவித்துள்ளார்.
English Summary
BJP donations received exposed p Chidambaram speech