ஜன.30, 31ல் அறிவிக்கப்பட்ட வங்கி ஊழியர்களின் போராட்டம் வாபஸ்..!! - Seithipunal
Seithipunal


வங்கி ஊழியர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு வங்கிகள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. மும்பையில் துணை தலைமை தொழிலாளர் ஆணையாளர் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் எந்த ஒரு உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்புடன் 15 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்துவதாக இந்திய வங்கிகள் நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால், எந்த உத்தரவாதமும் அளிக்கப்படாததால், வங்கி ஊழியர்கள் அனைவரும் திட்டமிட்டபடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வங்கி ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்துள்ளது. இதன் காரணமாக வரும் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bank employees strike called off


கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?Advertisement

கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?
Seithipunal