பெங்களூரு | மெட்ரோ ரயில் தூண் விழுந்து இறந்தவர்களுக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு! - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் கடந்த ஆண்டு கட்டப்பட்டு வந்த மெட்ரோ ரயிலின் தூண் சரிந்து விழுந்ததில் மென்பொறியாளார் தேஜஸ்வினி (வயது 28), அவரது மகன் விஹன் (வயது 2) இருவரும் உயிரிழந்தனர். 

மேலும் தேஜஸ்வினியின் கணவர் லோஹித் (வயது 34). அவரது மகள் வீனா (வயது 2) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து லோஹித்துக்கு பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் ரூ.20 லட்சம் நஷ்ட ஈடாக வழங்கப்பட்டது.

இது தொடர்பாக லோஹித் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ''இந்த விபத்தானது பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு காரணமாக நடைபெற்றது. 

இதில் எனது மனைவி மற்றும் மகனை நான் இழந்திருக்கிறேன். நானும் என் மகளும் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகிறோம். இதனால் மெட்ரோ ரயில் நிர்வாகம் நஷ்ட ஈடாக அளித்த ரூ.20 லட்சம் எனக்கு போதுமானதாக இல்லை. 

எனது மனைவி தேஜஸ்வினி இறப்பதற்கு முன்பாக, வங்கியில் கடன் வாங்கி அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாங்கினோம். அந்த கடனை தற்போது செலுத்த வேண்டியுள்ளதால் நஷ்ட ஈடாக ரூ.10 கோடி வழங்க வேண்டும்'' என கோரியுள்ளார்.

இந்த மனுவுக்கு பதில் நோட்டீஸ் அனுப்ப, நாகார்ஜூனா கட்டுமான நிறுவன நிர்வாக இயக்குநருக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம், தலைமை பொறியாளர், சம்பந்தப்பட்ட இடத்தில் பணியாற்றிய முதன்மை பொறியாளர், ஐசிஐசிஐ காப்பீட்டு நிறுவன மேலாளர் ஆகியோரிடம் நீதிபதி கிருஷ்ணா தீட்ஷித் உத்தரவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangalore metro rail pillar fall died Rs10 crore compensation


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->