துப்புரவு தொழிலாளிக்கு கிடைத்த ரூ.25 கோடி அமெரிக்க டாலர்: உடன் இருந்த உருக்கமான கடிதம்!  - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கம், நாடியா பகுதியைச் சேர்ந்தவர் சுலைமான் ஷேக். இவர் பெங்களூருவில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். 

கடந்த 1 ஆம் தேதி நாகவாரா ரயில் நிலையத்தில் இவர் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தபோது அங்கு ஒரு கருப்பு பை கிடந்தது. அதனை திறந்து பார்த்தபோது அதில் வெளிநாட்டு பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அதனை யாருக்கும் தெரியாமல் தனது அறைக்கு எடுத்துச் சென்றார். 

அதிக அளவில் பணம் இருப்பதால் அச்சமடைந்த சுலைமான் இது குறித்து தன் முதலாளி பாப்பா என்பவரை சந்தித்து தெரிவித்துள்ளார்.

இதனைப் பார்த்த பாப்பா சமூக ஆர்வலர் ஒருவரை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் துப்புரவு தொழிலாளி மற்றும் அவரது முதலாளியை பெங்களூரு காவல் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று கிடைத்த பணத்தை போலீசாரிடம் கொடுத்து ஆய்வு செய்தனர். 

அப்போது அது அமெரிக்க டாலர்கள் என எனவும் இந்திய மதிப்பில் ரூ. 25 கோடி எனவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கிடைத்த பணம் உண்மையான அமெரிக்கா டாலரா அல்லது போலியான நோட்டுகளா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் கிடைத்த பணத்துடன் ஒரு கடிதம் இருந்துள்ளது. அதில் இந்த பணத்தை நல்ல காரியத்திற்காக மட்டும் பயன்படுத்துமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதனால் போலீசார் கிடைத்த பணம் உண்மையானதாக இருக்கலாம் என கருதுகின்றனர். இருப்பினும் அமெரிக்கன் டாலர்களை சரிபார்க்க டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

டாலர்கள் உண்மையானதா என அங்கிருந்து தகவல் வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangalore Cleaner received US dollar


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->