அயோத்தி‌ ராமர் கோவில் எப்போது திறப்பு.. ராமஜென்மபூமி அறக்கட்டளை வெளியிட்ட தகவல்.! - Seithipunal
Seithipunal


அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் திட்டமிட்டதற்கு முன்பே முடிக்கப்பட்டு திறக்கப்படும் என ராமஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுப் பணியை ஸ்ரீராம ஜென்ம தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ராமர் கோயில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி மாதம் முதல் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த சித்ரா அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த தேவசரி மகாராஜ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து அறக்கட்டளை நிர்வாகி ஒருவர் தெரிவிக்கையில், ராம பிரானின் பிரமாண்ட கோவில் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே தயாராகிவிடும். கட்டுமானப்பணி வேகமாக நடந்து வருகிறது. 2024-ம் ஆண்டுக்குள் கோவிலின் கருவறையில் குழந்தை ராமர் பிரதிஷ்டை செய்யப்படுவார்' என தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது கோயிலின் தரை தளம் கட்டும் பணிகள் நடந்து வரும் நிலையில், கோயில் கருவறை கட்டும் பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு அடுத்தாண்டு ஜனவரிக்குள், கோயில் கட்டும் பணிகள் முழுதுமாக முடிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கோயிலில் ஒரே நேரத்தில் 300 முதல் 400 ராம பிரானை தரிசிக்க வகையில் கோயில் கட்டமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayothi ramar temple possible to open 2024 January


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->