பற்றி எரியும் ஆட்டோ - அரசு திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்.! - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. இந்தத் தேர்தலுக்காக நடத்தப்பட்ட பிரச்சாரத்தில் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றால், மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (ஆர்டிசி) பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயண செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தது.

அந்த அறிவிப்பின்படி, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு இலவச பேருந்து பயணத் திட்டத்தை 'மகாலட்சுமி திட்டம்' என்ற பெயரில் காங்கிரஸ் அரசு நடைமுறைப்படுத்தியது. அப்போது, பெண்களுக்கு ஆர்டிசி பேருந்துகளில் இலவச பயணத் திட்டத்தால் தங்கள் அன்றாட வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் புகார் தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் ஹைதராபாத் பிரஜா பவன் அருகே, பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நேற்று மாலை தனது ஆட்டோவுக்கு தீ வைத்தார். மேலும், அவர் தனது உடலிலும் தீவைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போலீஸார் ஆட்டோ ஓட்டுநரை காப்பாற்றினர். 

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் தற்கொலைக்கு முயன்றவர் பெயர் தேவா என்பது தெரியவந்தது. அரசு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து துணை முதல்வர் இல்லத்தின் முன்பு ஆட்டோவுக்கு தீ வைக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

autor driver protest in telangana for womans free bus


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->