பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி.. ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்.! - Seithipunal
Seithipunal


ஆட்டோ, டாக்ஸி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும் பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என்றும் டெல்லி ஆட்டோ மற்றும் கால்டாக்ஸி ஓட்டுனர்களின் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் ஒரு பிரிவான டெல்லி ஆட்டோ மற்றும் டாக்ஸி சங்கங்கள் இன்றும், நாளையும் டெல்லியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.

இந்த இரண்டு நாட்களில் ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் டெல்லியில் இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை எரிவாயு மானியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 30ஆம் தேதி கடிதம் எழுதியதாகவும் ஆனால் அரசிடம் இருந்து எங்களுக்கு எந்த பதிலும் வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Auto and call taxi two days strike in delhi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->