இன்று முதல் அமல்... ஏடிஎம் புதிய விதிமுறைகள்... பயனாளர்கள் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


உலகெங்கிலும் தற்போது பொருளாதார மந்த சூழ்நிலை நிலவி வருகிறது. ரஷ்யா மற்றும் முக்கிய நாடுகளுக்கு இடையேயான போரினை தொடர்வதால்  உலகப் பொருளாதார வீழ்ச்சி அடைந்தது. இதனைத் தொடர்ந்து உலக அளவில் பெரும்பாலான நாடுகள் பொருளாதார சிக்கலில் தவித்து வருகின்றன.

நமது நாட்டிலும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக விலையேற்றம்  மிகவும் ஏற்றம் கண்டுள்ளது. பெட்ரோல் மின்சாரம் என பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் எல்லா பொருட்களின்  விலையும்  ஏற்றம் கண்டிருக்கிறது.

பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக இந்தியாவில் இயங்கி வரும் பொது நிறுவனங்களும் பொது வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் பெருமளவு இழப்பை சந்தித்து வருகின்றன. இதனை சரி செய்வதற்காக பயனாளர்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளையும் புதிய விதிமுறைகளையும் விதித்து வருகிறது.

ஏடிஎம் மூலம் பணம் எடுப்பவர்கள் தங்கள் வங்கி கணக்கில் பணமில்லை என்றால் அபராதமாக ஜிஎஸ்டியுடன் பத்து ரூபாய் வசூலிக்கப்படும் என பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்திருக்கிறது. இந்த விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. மேலும் இ வாலட் மூலம்  மியூச்சுவல் ஃபண்ட்  முதலீடு செய்பவர்கள் கண்டிப்பாக கேஒய்சி முடித்திருக்க வேண்டும். அப்படி முடிக்காதவர்கள் இ வாலெட் மூலமாக முதலீடு செய்ய முடியாது எனவும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகளால் பயனாளர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ATM new regulations that came into effect from today are a shock to the users


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->