அயோத்தி செல்லும் கெஜ்ரிவால்: எப்போது தெரியுமா?  - Seithipunal
Seithipunal


டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் நாளை அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல உள்ளனர். 

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. 

இந்த கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். இந்நிலையில் அயோத்தி ராமர் கோவிலுக்கு டெல்லி முதல்வர் மற்றும் பஞ்சாப் முதல்வர் ஆகியோர் நாளை செல்ல உள்ளனர். 

மேலும் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் சென்று ராமரை தரிசிக்க உள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் பிரதிஷ்டை நிகழ்விற்கு ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் அழைப்பை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arvind kejriwal Ayodhya trip


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->