#BREAKING:: பாலியல் தொல்லை.. "சுட்டு கொன்ற குன்னர் தேசாய் மோகன்"...!! சக வீரரின் பகீர் வாக்குமூலம்..!! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் 2 பேர் தமிழ்நாட்டைச் கமலேஷ் மற்றும் யோகேஷ் குமார் என்பதை குறிப்பிடத்தக்கது.

இந்த துப்பாக்கி சூடானது தீவிரவாத தாக்குதல் இல்லை என பஞ்சாப் காவல்துறையினர் விளக்கம் அளித்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்டு முதற்கட்ட விசாரணையில் ராணுவ வீரர்கள் ரோந்தில் பயன்படுத்தப்படும் INSAS ரக துப்பாக்கிகள் ஏற்கனவே காணாமல் போயிருந்த நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளது. ராணுவ முகாமில் இருக்கும் ஒருவரோ அல்லது சிலரோ இந்த தாக்குதலை அரங்கேற்று இருக்கலாம் என விளக்கம் அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் 4 ராணுவ வீரர்களையும் சுட்டுக்கொன்ற குன்னர் தேசாய் மோகன் என்ற சக ராணுவ வீரரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 ராணுவ வீரர்கள் சக ராணுவ வீரரை பாலியல் துன்புறுத்தல் செய்தது போலீசார் நடத்தி விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட சாகர் பன்னே, யோகேஷ் குமார், சந்தோஷ் மற்றும் கமலேஷ் ஆகிய 4 வீரர்கள் தூக்கத்தில் இருந்தபோது குன்னர் தேசாய் மோகன் கொன்றுள்ளார்.

சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு ராணுவ வீரர்களால் குன்னர் தேசாய் மோகன் தொடர்ந்து பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தக் கொலைகளுக்கும் எந்த சீக்கியப் போராளிக் குழுவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பொறுப்பேற்று சீக்கிய தீவிரவாத குழுக்கள் வெளியிட்ட கடிதம் பொய்யானது என ராணுவ விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குன்னர் தேசாய் மோகன் தற்போது போலீஸ் காவலில் உள்ளதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arrested Soldier confess alleging sexual harassment by 4 soldiers


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->