திருப்பதி மலைப்பாதையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது.! - Seithipunal
Seithipunal


திருப்பதி மலை பாதையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் அடிக்கடி பக்தர்களின் நடை பாதைக்கு வருகின்றன. இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்து சென்று அடித்து கொன்ற சம்பவம் பக்தர்களுடைய பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். அதன்படி சிறுத்தையை பிடிப்பதற்காக திருப்பதி மலை பாதை அருகே 3 கூண்டுகளை வனத்துறையினர் வைத்திருந்தனர்.

இந்த கூண்டில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிறுமியை தாக்கிக் கொண்ட சிறுத்தை கூண்டில் சிக்கியது. பிடிபட்ட சிறுத்தையை வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் தற்போது திருப்பதி மலை பாதையில் வனதுறையினர் வைத்த தூண்டில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியுள்ளது.

லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோயில் அருகில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியுள்ளது. சிக்கியுள்ள சிறுத்தையை வனப்பகுதிக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Another leopard caught on the Tirupati mountain


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->