ஸ்ரீகாகுளம் கோயிலில் கூட்ட நெரிசல்: 9 பக்தர்கள் பலி!
Andhra Pradesh temple devotees Crowd stampede
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வரர் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் 9 உயிர்களை பறித்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏகாதசி பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தெய்வ தரிசனத்திற்காக கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் ஒரே நேரத்தில் மக்கள் பெருமளவில் கோவில் வளாகத்துக்குள் நுழைந்தபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காவல் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவிலின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த துயர சம்பவம் குறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எக்ஸ் பதிவில் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். “ஸ்ரீகாகுளம் மாவட்ட காசிபுக்கா வெங்கடேஸ்வரர் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் அதிர்ச்சி அளிக்கிறது. பக்தர்கள் உயிரிழந்தது மிகுந்த துயரம். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Andhra Pradesh temple devotees Crowd stampede