பாஜக என்ன செய்தாலும் எதிர்க்க வேண்டும்.. அன்றைக்கு வாஜ்பாய் பாராட்டியது நினைவில் உள்ளதா?..! கொந்தளிப்பில் அமித் ஷா.!! - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலத்தில் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியானது நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்திற்கு வரும் 21 ஆம் தேதியன்று சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி., பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அங்குள்ள கைத்தாள் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்வு கூட்டத்தில் பங்கேற்றுக்கொண்டார். 

இந்த கூட்டத்தில் பங்கேற்றுக்கொண்ட அமித் ஷா பேசியதாவது., இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய நபர்களை அவர்களின் நாட்டிற்கு அனுப்பும் கொள்கையில் தீவிரமாக உள்ளோம். இவர்களால் இந்தியாவின் பாதுகாப்பு என்பது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலான 2024 ஆம் வருடத்திற்குள்., இவர்கள் அனைவரையும் வெளியேற்றிவிடுவோம். 

இந்தியாவின் காஷ்மீருக்கு நீக்கம் செய்யப்பட்ட 370 சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு., இதற்கு முன்னர் பாராளுமன்றத்தை அலங்கரித்த அரசிற்கு துணிச்சல் இல்லை. நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவிக்கு வந்தவுடன்., இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டது. இந்த பிரச்சனை பாரதிய ஜனதா கட்சிக்கான பிரச்சனை இல்லை., இந்தியாவின் பாதுகாப்பு பிரச்சனை. 

modi, indian prime minister, prime minister modi,

இந்த விஷயம் நாட்டின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் என்பதால்., அனைத்து கட்சியிடம் இருந்தும் ஆதரவை எதிர்பார்த்த நிலையில்., காங்கிரஸ் கட்சியானது பாரதிய ஜனதா கட்சி செய்யும் அனைத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 370 சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்து ராகுல் காந்தி ஆதரிக்கிறாரா? இல்லையா? என்ற விளக்கத்தை தர வேண்டும். 

நமது பக்கத்தில் உள்ள நாடான வங்காளதேசம் நாடு உருவாக்கப்பட்ட சமயத்தில்., அப்போதைய பிரதமரான இந்திரா காந்தியை வாஜ்பாய் புகழ்ந்தே கூறியிருந்தார். ஏனெனில் இது தேச பாதுகாப்பு சம்மந்தப்பட்டது. மேலும்., முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்கை விட மோடி குறைவான முறையே வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மோடி மேற்கொண்ட பயணங்கள் அனைத்தும் நாட்டின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் முக்கியத்துவமானதாகும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

amith sha speech about congress party could not support bjp activity


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->